மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அனைத்து மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றனர்.
இந்நிலையில், காவல்துறை டிஜிபி-க்களின் முதல் நாள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி பங்கேற்று உள்நாட்டு பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்தினார்.