உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணை வெளியிடுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மறு உத்தரவு வரும் வரை, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற வேண்டாம் என தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம், ஏற்கெனவே சுற்றறிக்கையும் அனுப்பிவிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.