சிறையில் அடைத்த போதும், தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருவமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் "திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு, உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், நிர்பயா நிதியை பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.