உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - மு.க.ஸ்டாலின்


உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.


புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் கூட நடத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.


உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை மற்றும் பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை செய்து முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வழி இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.