நகராட்சி, மாநகராட்சிக்கு பின்னர் தேர்தல்..!


நிர்வாக பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். 


தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகப் பணிகள் முடிந்த பின்னர் தனியாக விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.


தேர்தல் நியாயமாகவும், நடுநிலையாகவும் நடத்துவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்னடைவு அல்ல என்று கூறிய தேர்தல் ஆணையர், தேர்தல் முடிந்த பின்னர் 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையரை பணிகள் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.


பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்வே அறிவிக்கப்பட்டதால் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தடையில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.